மின்நிறுத்தம்,கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கேசவன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் மனோரஞ்சிதம், ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ அசோக்குமார் சிறப்புரை யாற்றினார்.
சிமென்ட், கம்பி, செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வுக்கும், அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்துக்கும் கண்டனம் தெரிவித்தும், அதிமுகவில் குழப்பம் விளை விக்கும் சசிகலாவுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.