Regional02

விளைநிலத்தில் புகும் யானைகளை விரட்ட வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

கர்நாடக, ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள வேப்பனப் பள்ளியில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக 10 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங் களில் எல்லையோரம் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.நேற்று முன்தினம் சிகரமானப்பள்ளி கிராமத்துக்குள் புகுந்த யானைகள் அங்குள்ள வாழை, தக்காளி செடிகளை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன. மேலும், விளைநிலத்தில் பதிக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களை சேதப்படுத்தின.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:

இங்கு முகாமிட்டுள்ள யானைகள் விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் அதிகளவில் இழப்பு ஏற்படுகிறது. இதனை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT