கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பி.என்.தர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவான பிறகு பொறுப்பேற்கும் 2- வது ஆட்சியர் இவர். இவருக்கு முன் இருந்த கிரண் குராலா தற்போது மாற்றப்பட்டு, புதி ஆட்சியராக பி.என்.தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், இதற்கு முன் பெரு நகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார இணை ஆணையாளராக பணியாற்றியுள்ளார். இவரது சொந்த ஊர் ஹைதராபாத் ஆகும். மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு மொழிகள் நன்குஅறிந்தவர். இவர் 2012 இந்திய ஆட்சிப் பணி பிரிவைச் சேர்ந்தவர்.
புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற பி.என்.தர் செய்தியாளர்|களிடம், “மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு விரைந்து நடவடிக்கைஎடுக்கப்படும். தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளான ஆக்சிஜன் வசதிகள், படுக்கை வசதிகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். மலைவாழ் மக்கள் இம்மாவட்டத் தில் இருப்பதால் மலைவாழ் மக்களுக்கென தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் விரைந்து அவர்களை சென்றடைய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்” என்றார்.