Regional01

விவசாயி அடித்துக் கொலை மைத்துனர் உட்பட 3 பேர் கைது :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் அருகே மறவாய்க் குடியைச் சேர்ந்த விவசாயி ராமநாதன் (65). இவருக்கும் இவரது மைத்துனர் ராமசாமி (62) என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது.

நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராமசாமி, அவரது மனைவி ஆயிரவள்ளி (55), மருமகன் வினோத்குமார் (29), மகள் ஜெகதீஸ்வரி (23) ஆகியோர் சேர்ந்து ராமநாதனை கல்லால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ராமநாதனை சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து ராமசாமி, ஆயிரவள்ளி, ஜெகதீஸ்வரி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT