கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது.
கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ் தலைமை வகித்தார்.துணை ஆட்சியர் (பயிற்சி) அபிநயா, வட்டாட்சியர்கள் வெங்கடேசன், பூவிதன், ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வேப்பனப்பள்ளி உள்வட்ட வருவாய் கணக்குகள் ஆய்வு செய்து சரிபார்க்கப்பட்டது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் ஜமாபந்தியில் பொது மக்கள் தங்களது மனுக்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
13 வருவாய் கிராமங்கள்
இதில், 13 வருவாய் கிராமங் களுக்கு உட்பட்ட பொது மக்களிடமிருந்து இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு, ஆட்சியர் உத்தரவிட்டார்.இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் பிரபு, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சேதுராமலிங்கம், வட்டாட்சியர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.