திருநெல்வேலியில் ஊழல் இல்லாத நிர்வாகத்துக்கு முன் னுரிமை அளிக்கப்படும் என, மாநகராட்சி ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஐஏஎஸ் அதிகாரி பி.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாநகராட்சியில் கரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளும், பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் விரைவுபடுத்தப்படும். கரோனா முதல் மற்றும் 2-வது அலையால் இப்பணிகளில் தொய்வு இருந்தது. திருநெல் வேலி, பாளையங்கோட்டையில் எவ்வித வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டாலும், அதன் பாரம்பரியத்தை சிதைக்காமல் பணிகள் மேற்கொள்வோம். பொதுமக்களின் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பாதாள சாக்கடை திட்டத்துக்காக சாலைகளை சேதப்படுத்தியிருக்கும் பிரச்சினை, தாமிரபரணியில் கழிவுநீர் சேருவது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் இல்லாத நிர்வாகத்தை அளிப்பதற்கு முன்னுரிமை தரப்படும் என்று தெரிவித்தார்.