திருநெல்வேலி மாவட்டத்தில் 108 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 416 பேர் குணமடைந்தனர். 2 பேர்உயிரிழந்தனர். தென்காசி மாவட்டத்தில் நேற்று 98 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 211 பேர் குணமடைந்தனர். தற்போது1,520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் 5 பேர் உயிரிழந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 174 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஏற்கெனவே சிகிச்சையில் இருந்த 11 பேர் மரணமடைந்தனர். 3,587 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 167 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,434 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர்.