Regional01

ஈரோடு மாவட்டத்தில் ஒருவாரத்தில் - 82,789 பேருக்கு கரோனா பரிசோதனை 10 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, வீடு, வீடாகச் சென்று கரோனா அறிகுறிகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் பணி தீவிரப்படுத் தப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான கரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளில் கடந்த 13-ம் தேதி வரை, 13 ஆயிரத்து 143 பேருக்கு கரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2022 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 42 பேரூராட்சிகளில் 6161 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 1054 பேருக்கும், நான்கு நகராட்சிகளில் 942 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 121 பேருக்கும், ஈரோடு மாநகராட்சியில் 4539 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 1021 பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மாவட்டம் முழுவதும் நடந்த 3579 காய்ச்சல் கண்டறியும் முகாம்களில், இரண்டு லட்சத்து 5435 பேர் பங்கேற்றுள்ளனர். கடந்த மூன்று வாரத்தில் சராசரியாக வாரம் 40 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருப்பினும் கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக, கடந்த 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை அதிகபட்சமாக 82 ஆயிரத்து 789 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 10 ஆயிரத்து 665 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT