Regional01

சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் :

செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் இன்று (16-ம் தேதி) நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று 48 பகுதிகளில் நடத்தப்பட்ட காய்ச்சல் கண்டறியும் முகாம்களில், 3 ஆயிரத்து 289 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

மாநகராட்சிப் பகுதிகளில் இன்று (16-ம் தேதி) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இ.பி.காலனி, வி.எம்.ஆர்.நகர், மஜித் தெரு, சின்னேரி வயல்காடு, நகரமலை அடிவாரம், ஜல்லிக்காடு, எஸ்.பி.பங்களா பின்புறம், ராமசாமி தெரு, வெங்கடாஜலம் காலனி, காமராஜர் நகர், புதுத்தெரு, பூவாத்தாள் தெரு, சிவனார் தெரு, கண்ணகி தெரு, கருங்கல்பட்டி மெயின்ரோடு, ஆறுமுகம் தெரு ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது.

நண்பகல் 12 முதல் மதியம் 2 மணி வரை இந்தியன் பேங்க் காலனி, அந்தோணிபுரம், பெருமாள் கோயில் தெரு, அந்தோணிசாமி தெரு, ஏ.டி.சி. நகர், ராணி அண்ணா நகர், மேயர் நகர், சுந்தரம் தெரு, தாண்டவன் நகர், ரங்கநாதன் தெரு, ஆதிசெல்வம் தெரு, சோழன் தெரு, கறி மார்க்கெட், எஸ்.கே.கார்டன், கலைஞர் தெரு, வசந்தம் நகர் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படுகிறது.

மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை, ஜாகீர் அம்மாப்பாளையம் காமராஜர் தெரு, கபிலர் தெரு, நெடுஞ்சாலை நகர், வேலு சாமி தெரு, ராம் நகர், ஜான்சன்பேட்டை கிழக்கு, கோவிந்தகவுண்டர் தோட்டம், சின்னசாமி தெரு, மாரியம்மன் கோயில் தெரு, டாக்டர் வரதராஜன் தெரு, மேட்டுத் தெரு, அண்ணா தெரு, மீனாட்சிபுரம், அம்பேத்கர் தெரு, சென்றாயன் தெரு, ராமையன் தெரு ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது. சித்த மருத்துவ முகாம் காலை 9 முதல் மதியம் 1 மணி வரை வேளாண்மை கூட்டுறவு சங்க மைதானத்தில் நடத்தப்படுகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT