கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 2.60 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட 13 இடங்களில் நேற்று கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதன் மூலம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 2.60 லட்சத்தை கடந்துள்ளது.
இதனிடையே, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவ மனை யில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 75 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அங்கு தடுப்பூசி போடுவதற்கு பதில் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் அல்லது மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி மையம் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.