Regional01

காவல்துறை வாகனத்தை தாக்கிய 7 பேர் கைது :

செய்திப்பிரிவு

அம்பத்தூரில் உள்ள ஐசிஎப் காலனி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியில் இளைஞர்கள் சிலர் பம்பரம் விட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கோகுல் என்பவரை அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மதுபோதையில் தாக்கியுள்ளனர். இதையடுத்து அவர் இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

இதைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள், போலீஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் வாகனம் மீது கற்களை வீசினர். மேலும், சைக்கிள் செயின்களால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால், வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்கின. தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டதாக 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். வாகனங்களை அடித்து உடைத்தவர்களின் கைகளில் காயங்கள் இருப்பதால் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT