Regional02

தமிழகத்தில் தொழில்கல்வி படிப்புகளில் - அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை ஆய்வு செய்ய ஆணையம் : ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

தொழில் கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆய்வுசெய்து பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதஉள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தர விட்டது.

இதனால், சுமார் 400 மாணவர்கள் பயன் அடைந்தனர். இதேபோல், பொறியியல் உட் பட படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தொழில்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாண வர்களின் சேர்க்கை அளவை ஆய்வு செய்து பரிந்துரை வழங்குவற்காக ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்ட அறிவிப்பு:

கடந்த 2020-21-ம் கல்வியாண் டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

அதேபோல், பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன் வளம் மற்றும் சட்டம் போன்ற தொழில்கல்வி படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி பல்கலைக்கழகங்கள், அரசுக் கல்லூ ரிகள் மற்றும் முன்னிலை வகிக்கும் தனியார் கல்லூரிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும் என பல் வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இதையடுத்து அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்களின் பொருளாதார நிலை, அதனால் அவர்கள் சந்திக்கக்கூடிய இடர்பாடுகள் மற்றும் கடந்த ஆண்டுகளில் பல்வேறு தொழிற்கல்வி நிறுவனங்களில் அந்த மாண வர்களின் சேர்க்கை எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை தொழில் கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவில் இருப்பின், அதை சரிசெய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம், தனது பரிந்துரை அறிக்கையை ஒரு மாதத்துக்குள் அரசுக்கு அளிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT