Regional01

உச்சிப்புளி அருகே ஆற்றுப் படுகையில் சிக்கி மீனவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

உச்சிப்புளி அருகே வைகை யாற்றுப் படுகை நீரில் மூழ்கி மீனவர் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே எம்பிகே வலசையைச் சேர்ந்தவர் முனியாண்டி (46). மீனவரான இவர் நேற்று முன்தினம் இரவு வைகையாற்றுப் படுகையில் மீன்பிடிக்கச் சென்றார்.

அப்போது ஆற்றுப் படுகை சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் காலையில் அவரைத் தேடிச் சென்றனர். அப்போது அவர் ஆழமான சேற்றுப் படுகையில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.

உச்சிப்புளி போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT