Regional02

விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் - உயரிய விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு :

செய்திப்பிரிவு

உயரிய விருது பெற விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசால் ஆண்டு தோறும் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, ராஷ்டிரிய கேல் புரோட்சஹான் விருது, தயாள் சந்த் விருது ஆகிய உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல பயிற்சியாளர் களுக்கும் உயரிய விருதான துரோணாச்சாரியா விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, 2021-ம் ஆண்டு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 21-ம் தேதிக்குள், ‘உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எண்.116-ஏ, ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை - 600084’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT