Regional02

தூத்துக்குடியில் 222 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 116 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 643 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 115 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 188 பேர் குணமடைந்தனர். தற்போது 1,634 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 222 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 526 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 2,627 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 4 பேர் உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக 300-க்கும் குறைவாகவே கரோனா தொற்று உள்ளது. 24 மணி நேரத்தில் 160 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் மரணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT