Regional02

கரோனா நிவாரணம் வழங்கல் :

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வாஞ்சியம், அபிஷேகக்கட்டளை ஆகிய பகுதிகளில் ஆதியன் பழங்குடியி னரான பூம்பூம் மாட்டுக்காரர்கள் 50 குடும்பத்தினர் வசித்து வருகி றார்கள்.

தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிந்த திரு வாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.சீனிவாசன் நேற்று பூம்பூம் மாட்டுக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர், அவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார்.

SCROLL FOR NEXT