வடுகந்தாங்கல் வட்டார மருத்துவ அலுவலரிடம் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங் களை ஒப்படைத்த அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார். 
Regional01

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல் :

செய்திப்பிரிவு

வடுகந்தாங்கல் மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கே.வி.குப்பம் அடுத்த வடுகந்தாங்கலில் உள்ள மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இந்திய வளர்ச்சி இயக்கம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில், ரூ.2.50 லட்சம் மதிப்பிலான இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மருத்துவ உப கரணங்களை வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் திவ்யாவிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சீதாராமன், தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்டச் செயலர் வழக்கறிஞர் முனிசாமி, மாவட்ட துணை செயலர் வேல்முருகன், இந்திய வளர்ச்சி இயக்க கருத்தாளர்கள் சாரதா, செல்வி. தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT