Regional02

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களிடம் வாகனங்கள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் நேற்றுகூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தவர்கள் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகக் கவசம் அணியாமல் பொது வெளியில் இருந்தவர்கள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டு, 227 மதுபான பாட்டில்கள், 6 நான்கு சக்கரவாகனங்கள், 3 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் ரூ.ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

காங்கயம் புளிமா நகர் பகுதியில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடிய 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.3,670 பறிமுதல் செய்யப்பட்டது" என்றார்.

SCROLL FOR NEXT