சேந்தமங்கலத்தில் நடைபெற்ற அரசுப் பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நாமக்கல் எம்பி ஏ.கே.பி. சின்ராஜ் பேசினார். 
Regional01

அரசு ஒப்பந்ததாரர்களுடன் நாமக்கல் எம்பி ஆலோசனை : பணிகளை தரமாக மேற்கொள்ள வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் அரசுப் பணிகளை டெண்டர் எடுத்து செய்யக்கூடிய ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சேந்தமங்கலத்தில் நடைபெற்றது.

நாமக்கல் எம்பியும் மத்திய ஊரக வளர்ச்சித்துறையின், மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புகுழு (திஷா) தலைவருமான ஏ.கே.பி. சின்ராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

2020-2021-ம் ஆண்டில் நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை ஒப்பந்ததாரர்கள் உடனடியாக செய்து முடிக்க வேண்டும். அரசுப் பணிகளை எவ்வித குறைபாடும் இல்லாமல் தரமாக செய்யவேண்டும்.

ஒப்பந்ததாரர்கள் பணி செய்யும்போதே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு நிலையிலும் நேரில் சென்று ஆய்வு செய்து தரத்தினை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். திஷா குழு உறுப்பினர் செந்தில் முருகன் மற்றும் ராசாத்தி அருள்மணி உள்பட பலர் கலந்து கொண்டர்.

SCROLL FOR NEXT