Regional01

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடக்கம் :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 121 மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று முதல் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. 658 மாணவர்களும், 649 மாணவிகளும் நேற்று சேர்ந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி மாணவர் சேர்க்கையை தொடக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலர் கா.கார்த்திகா உடனிருந்தார். இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் 199 மேல்நிலைப் பள்ளிகளிலும், கடலூர் மாவட்டத்தில் 296 மேல்நிலைப் பள்ளிகளிலும் நேற்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

SCROLL FOR NEXT