Regional02

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் - உயிர் காக்கும் மாத்திரைகள் இலவசமாக வழங்கிட வேண்டும் :

செய்திப்பிரிவு

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழு கூட்டம் இணையம் வழியாக நேற்று நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் மாதவன் தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் மூசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் கரோனா தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்புகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும். தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு, கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்கள் என்பதற்கான சான்றிதழை மறைக்காமல் வழங்கிட வேண்டும். வேலையின்றி தவிக்கும் முறைசாரா தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாய தொழிலாளர்களுக்கு முறைசாரா நல வாரியம் மூலம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவைகளை கட்டணமின்றி இலவசமாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT