சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் மயில்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஆனைவாரி, எறும்பூர், வளையமாதேவி,ஒரத்தூர், ஆயிப்பேட்டை, அகரஆலம்பாடி மற்றும் சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெரு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், சிதம்பரம் நகர பகுதி, வல்லம்படுகை, வடக்குமாங்குடி உள்ளிட்ட பகுதிகிளில் மயில்கள் அதிகமாக சுற்றி திரிகின்றன. மயில்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பும், மாலை சூரியன் மறைந்த பிறகும் இவைகள் தங்களது மறைவிடங்களிலிருந்து வந்து. வயல்வெளியில் தங்களுக்கான இரைகளை தேடித்தின்கின்றன. மயில்கள் வயல்களில் இரைகள் தேடி செல்வதை அப்பகுதி வழியாக செல்பவர்கள் வேடிக்கை
பார்த்துக்கொண்டும், தங்களது செல்போனில் படம் பிடித்துக்கொண்டும் செல்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது:
சமூக விரோதிகளால் மயில்கள் வேட்டையாடப்படுகிறது. தற்போது நடவு வயல்களில் அமைக்கப்படும் மின்வேலிகளால் அவற்றுக்கு பெரும் ஆபத்துக்கள் காத்திருக்கின்றன. மயில்கள் இரைதேடும்போது எதிர்பாராமல் மின்வேலியில் சிக்கி உயிரிழக்கும் நிலையும் உள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் மயில்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டும். வனத் துறையினரும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.