மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொகுதி பாமக எம்எல்ஏ சிவக்குமார் முன்களப்பணியாளர்களான துப்புரவு தொழிலாளர், செவிலியர், மின்வாரிய ஊழியர் ஆகியோரை கொண்டு திறக்க வைத்தார். இந்நிழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
Regional02

மயிலம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு :

செய்திப்பிரிவு

மயிலம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் களப்பணியாளர்களை கொண்டு நேற்று திறக்கப்பட்டது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது புதிய சட்டமன்ற அலுவலகங்களைத் திறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அமைந்துள்ள மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முன்களப்பணியாளர்களான துப்புரவு தொழிலாளர், செவிலியர், மின்வாரிய ஊழியர் ஆகியோரை கொண்டு பாமக எம் எல் ஏ சிவகுமார் திறந்தார். இந்நிழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT