ராமநாதபுரம் அரசு மருத்து வமனை முறைகேடு புகார்கள் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக கூடுதல் இயக்குநர் கள் விசாரணை செய்தனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர் கள் கவனம் செலுத்தவில்லை என்றும், மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவர்கள் தங்களது தனியார் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்வதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து மருத்துவக் கல்வி இயக்குநரக கூடுதல் இயக்குநர்கள் பார்த்தசாரதி, ராகவன் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் டீன் அல்லி உள்ளிட்ட அதிகாரிகள், மருத்துவர்களிடம் நேற்று விசாரணை நடத்தினர்.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகி நாகேஸ்வரன் உள்ளிட்டோரி டமும் விசாரித்தனர்.