Regional02

கர்நாடகாவிலிருந்து திருப்பூருக்கு : லாரியில் கடத்தி வரப்பட்ட 915 மதுபாட்டில்கள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

கர்நாடகாவிலிருந்து திருப்பூருக்கு கடத்தி வரப்பட்ட 915 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாநகர காவல் துறை நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், 15-வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜன் தலைமையிலான போலீஸார், திருமுருகன்பூண்டி சுற்றுச்சாலை பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், கர்நாடகாவிலிருந்து விற்பனைக்காக திருப்பூர் வேலம்பாளையத்துக்கு கடத்திவரப்பட்ட 915 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. லாரியுடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநரான தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மங்களாபட்டியைச் சேர்ந்த எம்.ராஜகோபால் (31) என்பவரை கைது செய்தனர்.

துரிதமாக செயல்பட்ட நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் சந்திரமோகன், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராஜன் உள்ளிட்டோரை மாநகர காவல் ஆணையர் வி.வனிதா பாராட்டினார்.

SCROLL FOR NEXT