நெல் குவிண்டாலுக்கு ரூ.3000 வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு நெல்லுக்கு ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தி அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. தற்போது, ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,940 மட்டுமே கிடைக்கும். நெல் மூட்டை களை ஏற்றவும், இறக்கவும் ரூ.100 கூடுதலாக செல வாகிறது.
விவசாயிகள் கடன் பெற்று உற்பத்தி செய்யும் நெல்லை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
தமிழக அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 விலை வழங்கவும், நெல்லை வாங்கும்போது ஏற்படும் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.