ஆண்டிமடத்தை அடுத்த அணிக் குதிச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(24). பெயின்டரான இவர், 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதான சிறுமியை காதலித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை ரஞ்சித்குமார் பலாத் காரம் செய்ததில், சிறுமி கர்ப்ப மடைந்தார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலு வலக அலுவலர்களின் உதவியு டன் சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் நேற்று முன்தினம் ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.