தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. 
Regional01

தூத்துக்குடியில் கலந்தாய்வு மூலம் - 69 சப்- இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் 69 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டு, அதற்கான ஆணைகள் உடனடியாக வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நேற்று மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பிக்கள் கோபி, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எஸ்பி பேசும்போது, ‘ தவறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் எவ்வித காலதாமதமும் இருக்கக்கூடாது. பொதுமக்களிடமிருந்து வரக்கூடிய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

69 உதவி ஆய்வாளர்களுக்கு அவர்கள் விரும்பும் இடங்களுக்கு கலந்தாய்வு அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, அதற்கான ஆணைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. பணியிட மாறுதல் செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்கள் அனைவரும் புதிய பணியிடங்களில் உடனடியாக பணிக்கு சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கலந்தாய்வில் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங், டிஎஸ்பிக்கள் கணேஷ், பொன்னரசு, சங்கர், கலைக்கதிரவன், பிரகாஷ், காட்வின் ஜெகதீஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT