டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி தச்சநல்லூரில் பாஜகவினர் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: மு.லெட்சுமி அருண் 
Regional01

டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஆர்ப்பாட்டம் : நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் ஏராளமானோர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி என்ஜிஓ காலனியில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தனது வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில், அப்பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் கலந்துகொண்டனர். திருநெல்வேலி மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்ட தலைவர் ராமராஜா தலைமையில் தலைவன் கோட்டையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி

எட்டயபுரத்தில் மாவட்டச் செய லாளர் ஆத்திராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத் தலைவர் ராம்கி, மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் சங்கரலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி

நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர் மீனாதேவ், வெள்ளடிச்சிவிளையில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் என, 600-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT