Regional01

விளையாட்டில் சாதித்த வீரர்களுக்கு விருது : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விளையாட்டுத் துறையில் நமது தேசத்துக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டுத் தொடர் புடையவர்களுக்கு பல்வேறு விருதுகளை இந்திய அரசு ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.

இவ்வாண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, துரோணாச் சார்யா விருது, தயான்சந்த் விருது மற்றும் ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. விண்ணப்பதாரர்கள் http://yas.nic.in மற்றும் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை 16.06.2021 அன்று மாலை 4 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் சாலை, தூத்துக்குடி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அடங்கிய உரையின் மேல் சம்பந்தப்பட்ட விருதினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 7401703508 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT