குரும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படை யில் ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி தலைமையில், எஸ்ஐ தாமஸ், வைகுண்டம் தனிப் பிரிவு எஸ்ஐ ஜெகநாதன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் குரும்பூர் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த இருவர் போலீஸாரை கண்டதும் தப்பியோடினர். தகவல் அறிந்து எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். அங்கிருந்த 20 லிட்டர் சாராய ஊரலை போலீஸார் அழித்தனர்.
மேலும்,சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய காஸ் அடுப்பு, சிலிண்டர் மற்றும் 2 பானைகளை பறிமுதல் செய்தனர்.