Regional02

கோயிலில் நகைகள் திருட்டு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் வடக்கு பாப்பான்குளத்தில் குருநாதர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் நிர்வாகி கோவிந்தராஜ், விஜயநாராயணம் போலீஸில் புகார் அளித்தார்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். கோயிலில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள சுவாமி நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT