Regional02

தீ விபத்து :

செய்திப்பிரிவு

சங்கரன்கோவில் அருகே உள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர், தனது விவசாய நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில், இவரது கரும்புத் தோட்டத்தில் தீப்பிடித்தது. சங்கரன்கோவில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், சுமார் 7 ஏக்கரில் சாகுபடி செய்யப் பட்டிருந்த கரும்புகள் எரிந்து சேதமடைந் ததாகக் கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT