Regional01

கரோனா நிவாரணம் வழங்குவதில் - முறைகேடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் : தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டத்தில் கரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்குவதில் முறைகேடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ம் கட்ட கரோனா நிவாரணம் தலா ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள் வழங்கும் பணி வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. நியாய விலைக் கடைகளில், தினசரி தலா 200 பேர் வீதம், கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து வழங்கப்படவுள்ளன.

கரோனா நிவாரண நிதி உதவி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்குவதில் முறைகேடு இருந்தால், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் 04175-233063 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT