Regional02

விதிகளை மீறிய : பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு ‘சீல்' :

செய்திப்பிரிவு

அரசின் வழிகாட்டி நெறிமுறை களை மீறிய பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் ‘சீல்' வைத்தனர்.

திருப்பூர் வடக்கு வட்டம் நெருப்பெரிச்சல் பாண்டியன் நகர் பகுதியிலுள்ள செளடாம்பிகை நகரில், அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாமல் தனியார் பின்னலாடை ஏற்றுமதிநிறுவனம் இயங்கி வந்துள்ளது.

இதை, கோட்டாட்சியர் ப.ஜெகநாதன் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்றுகண்டறிந்தனர்.

இதையடுத்து, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கி வந்த பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

SCROLL FOR NEXT