கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு கூடுதலாக தமிழகத்துக்கு கரோனா தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது. இதன் காரணமாககடலூர் மாவட்டத்துக்கு 12 ஆயிரத்து 900 கோவி ஷீல்டு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்து வமனைகள், 71 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நேற்றுதடுப்பூசி போடும் பணி தொடங் கியது. அந்தந்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் தடுப்பூசி போட நேற்று பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். வரிசையில் நின்று தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். அரசு உத்தரவு படி முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை மருத்துவர்கள் கண்காணிப்பில் செவிலியர்கள் பொதுமக்களுக்கு போட்டனர். நேற்று ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப் பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.