Regional01

சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூரில் - குறைந்த மின் அழுத்தம் வீடுகளில் கடும் பாதிப்பு :

செய்திப்பிரிவு

மழவராயநல்லூர் பகுதியில் குறைந்த மின்அழுத்ததால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் பாதிக்கப்படுகின்றன.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது மழவராயநல்லூர் கிராமம். இக்கிராமத்தின் வழியாக சேத்தியாத்தோப்பு துணை மின்நிலையத்திலிருந்து உயரழுத்த மின் வழித்தடம் செல்கிறது. இந்த மின் வழித்தடமானது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட பழமையான மின்வழித்தடமாகும். இதன் மூலமே மழவராயநல்லூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பல கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் மின் மோட்டார் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது மழவராயநல்லூர் கிராமத்தில் குறைந்த மின்னழுத்தமே கிடைக்கிறது. இதனால் விவசாய மின்மோட்டார்கள் பழுதடைகின்றன. வீடுகளில் மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், மின்விளக்குகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன. இப்பகுதியில் ஒரு டிரான்ஸ்பார்மர் அமைத்தால் குறைந்த மின்அழுத்தம் சரியாகி விடும். இதுகுறித்து இப்பகுதி மக்கள் பல முறை மின்துறை உயரதிகாரிகளுக்கு மனு அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

SCROLL FOR NEXT