Regional02

ஆக்கிரமிப்பால் மாயமான தேனி ராஜ வாய்க்கால் : அதிகாரிகள் ஆய்வு :

செய்திப்பிரிவு

தேனி கொட்டக்குடி ஆற்றில் இருந்து பிரிந்து வரும் தண்ணீர், ராஜ வாய்க்கால் வழியே தேனி காமராஜர் பேருந்து நிலையம், மதுரை சாலை, பங்களாமேடு வழியாக ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாமரைக்குளம் கண்மாய்க்குச் செல்லும். அங்கிருந்து மறுகால் பாயும் தண்ணீர், முல்லை பெரியாற்றில் சென்று சேரும்.

காலப்போக்கில் நகர் விரிவாக்கத்தால் இந்த வாய்க்கால் ஆக்கிரமிப்புக்குள்ளாகி சாக்கடை அளவுக்கு குறுகிவிட்டது.

இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் இந்த வாய்க்காலை பார்வையிட்டனர். பழைய வரைபடங்கள் மூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT