கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று 282 கனஅடியாக அதிகரித்தது.
தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையில் திறந்துவிடப்படும் நீரின் அளவைப் பொறுத்து, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 157 கனஅடியாக இருந்தது.
இந்நிலையில் நேற்று அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 282 கனஅடியாக அதிகரித்தது. இதே போல், கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 295 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் மழை தூறல் காணப்பட்டது.