மத்திய மண்டலத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் நேற்று 645 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூரில் 98, கரூரில் 127, நாகை, மயிலாடுதுறையில் 419, பெரம்பலூரில் 84, புதுக்கோட்டையில் 151, தஞ்சாவூரில் 645, திருவாரூரில் 261, திருச்சியில் 420 என மத்திய மண்டலத்தில் 2,205 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
அரியலூரில் 1, கரூர் மற்றும் பெரம்பலூரில் தலா 4, நாகை, மயிலாடுதுறையில் 13, புதுக்கோட்டையில் 2, தஞ்சாவூரில் 5, திருவாரூரில் 3, திருச்சியில் 11 பேர் என மொத்தம் 43 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.