சமுதாய பொறுப்புணர்வு செயல்பாட்டுக்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துக்கு (டிஎன்பிஎல்) தங்க மயில் விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி இன்ஸ்டியூட் ஆப் டைரக்டர்ஸ் என்ற அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் பொறியியல், புதுப்பிக்கக்கூடிய சக்தி உற்பத்தி, வங்கித்துறை, சிமென்ட், காகித உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்களில் சமுதாய பொறுப் புணர்வு திட்டத்தை சிறப் பாக செயல்படுத்தும் நிறு வனத்தை உலக அளவிலும், தேசிய அளவிலும் தேர்வு செய்து தங்கமயில் விருதை வழங்கி வருகிறது.அதன்படி, கரூர் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சார்ந்த நலிவுற்ற சமுதாய குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி, இலவச மருத்துவ முகாம்கள், கண் மருத்துவ முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நலப்பணித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதையடுத்து, 2020-ம் ஆண்டுக்கான சமுதாய பொறுப்புணர்வு செயல் பாட்டுக்காக வழங்கப் படும் தங்கமயில் விருதுக்கு 319 நிறுவனங்கள் போட்டியிட்டதில், சிறந்த செயல்பாட்டுக்காக தேசிய அளவில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.காணொலி காட்சி மூலம் ஜூன் 10-ம் தேதி நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்று காகித நிறுவனம் செயல்படுத்தி வரும் நலப்பணித்திட்டங்கள் பற்றியும், கரோனா தடுப்பு பணிகளின் பங்களிப்பு பற்றியும் உரையாற்றி விருதைப் பெற்றுக் கொண்டார்.