மகளிர் சுயஉதவி குழுக் கடனை ரத்து செய்ய வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட விமன்ஸ் இந்தியா மூவ்மென்ட் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.செய்யதுஅலி பாத்திமா உள்ளிட்டோர் அளித்த மனு விவரம்:
கரோனா 2-ம் அலையால் பொது மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலப்பாளையத் திலுள்ள பெரும்பாலான பெண்கள் சுயஉதவி குழுக்கள் மூலம் தவணை முறையில் கடன் பெற்றுள்ளனர். தவணை தொகையை 3 மாத தாமதத்தில் செலுத்துமாறு அரசும் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த உத்தரவை மீறி மக்களை கட்டாயப்படுத்தி கடனை வசூல் செய்கிறார்கள். இதனால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சுயஉதவிக் குழு கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.