Regional02

போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ்குமார்(28). இவர், தென்பாகம் காவல்நிலையப் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அறிந்த சதீஷ்குமார் தலைமறைவானார்.

இந்நிலையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையப் பகுதியில் தென்பாகம் காவல் நிலைய எஸ்ஐ வேல்ராஜ் தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சதீஷ்குமாரை மடக்கி பிடித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மகளிர் போலீஸார் சதீஷ்குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT