Regional02

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஜமாபந்தி : இ-சேவை மையங்களில் கோரிக்கையை பதிவு செய்யலாம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரின் அறிவுரைகளின்படி தற்போது நிலவி வரும் கரோனா பரவல் காரணமாகவும், தொற்று பரவுதலை தடுக்கும் விதமாகவும் வருவாய் தீர்வாய நாட்களில் பொது மக்கள்வருவாய்த் தீர்வாய அலுவலரிடம் நேரில் வந்து மனுக்களை கொடுப்பதற்கு பதிலாக தங்கள் வட்டத்துக்கு உட்பட்ட இணையவழி இ-சேவை மையங்களில் ஜூலை31-ம் தேதி வரை ஜமாபந்தி கோரிக்கை தொடர்பான மனுக்களை பதிவு செய்து தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 1430-ம் பசலி ஆண்டு வருவாய்த் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்து வருவாய்த் தீர்வாய அலுவலரிடம் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்கு பதிலாக தங்கள் வட்டத்துக்கு உட்பட்ட இணையவழி இ-சேவை மையங்களுக்கு சென்று ஜமாபந்தி கோரிக்கை மனுக்களை பதிவு செய்து தீர்வு காணலாம், என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT