சேத்துப்பட்டில் அரசு மருத்துவமனைக்கு புதிய இடத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட வட்டாட்சியர் பூங்காவனம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 
Regional01

சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு - கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக கருத்து கேட்பு கூட்டம் :

செய்திப்பிரிவு

சேத்துப்பட்டு அரசு மருத்துவ மனைக்கு புதிய இடத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான ஆலோசனை கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அரசு மருத்துவ மனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு குறித்த ஆலோசனை மற்றும் கருத்து கேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு வட்டாட்சியர் பூங்காவனம் தலைமை வகித்தார்.

மருத்துவ அலுவலர் ஷோபனா, பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், வியாபாரிகள் சங்கத் தலைவர் புருஷோத்தமன், நகர திமுக செயலாளர் முருகன், நகர அதிமுக செயலாளர் ராதாகிருண்ணன் மற்றும் வருவாய்த் துறையினர், காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அரசு மருத்துவ மனைக்கு புதிதாக கூடுதல் கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள 2 இடங்கள் குறித்து வியாபாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதை யடுத்து, 2 இடங்களுக்கான வரைபடத்தை தயாரித்து மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு விரை வாக அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT