TNadu

12 மணி நேரத்தில் கரோனா பரிசோதனை முடிவு : ஈரோடு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

செய்திப்பிரிவு

ஈரோட்டில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை முடிவுகள் 12 மணி நேரத்தில் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாள்தோறும் 12 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கரோனா பரிசோதனை மாதிரிகள், பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு முடிவுகள் பெறப்பட்டு வந்தன.பரிசோதனை எண்ணிக்கை அதிகமான நிலையில், பரிசோதனை முடிவுகள் கிடைக்க 3 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கரோனா பரிசோதனை முடிவுகள் 12 மணி நேரத்தில் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது: கரோனா பரிசோதனைமுடிவுகளை விரைவாகப் பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் எடுத்த முயற்சியால், 12 மணி நேரத்தில் முடிவு கிடைத்து வருகிறது. ஈரோட்டில் இருந்து எடுக்கப்படும் கரோனா பரிசோதனை மாதிரிகள், கோவையில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விரைவாக முடிவுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்க முடிகிறது என்றார்.

SCROLL FOR NEXT