திருச்சி விமான நிலையத்தில் நேற்று ரூ.2.46 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து தனியார் விமானம் நேற்று முன்தினம் இரவுதிருச்சிக்கு வந்தது. அதில் சிலர்தங்கம் கடத்தி வருவதாக கிடைத்ததகவலின்பேரில், மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது துபாய் விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனையிட்டபோது, 3 நபர்களிடம் இருந்து ரூ.2.46 கோடி மதிப்பிலான சுமார் 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. அவர்களிடம் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.