Regional02

மளிகை கடைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் :

செய்திப்பிரிவு

திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் மற்றும் மளிகை,காய்கறிக் கடைகள் தளர்வுநேரத்தை கடந்தும் இயங்குவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, திருப்பூர் தெற்கு வட்டம் தாராபுரம் சாலை,சந்திராபுரம், ரங்கேகவுண்டன்பாளையம், கோவில்வழி, முத்தணம்பாளையம் ஆகிய பகுதிகளிலுள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள், மளிகை, காய்கறி கடைகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்குணசேகரன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் புகழேந்தி, தெற்கு வட்டாட்சியர் சுந்தரம் ஆய்வு மேற்கொண்டனர். இதில், விதிமுறைகளை மீறி இயங்கிய இரண்டு பனியன் நிறுவனங்கள் மற்றும் மளிகை கடைகளுக்கு ரூ.15,000 அபராதம் விதித்தனர்.

SCROLL FOR NEXT