Regional02

பிரத்யேக எண்ணில் : தரப்பட்ட புகாரால் : 8 பேர் கைது :

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக விரோத செயல்கள் தொடர்பாக மக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் 63799 04848 என்ற பிரத்யேக செல்போன் எண்ணை

எஸ்பி வருண்குமார் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த எண்ணுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப் படையினர் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், பொன்னேரி, மீஞ்சூர் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சூர்யா, ராஜவேல், திவாகர், வல்லூர் ஆனஸ்ட்ராஜ், நிஜந்தன் மற்றும் இரவில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த அஜித், பரத்,விஜயன் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர். இதையடுத்து, தனிப்படை போலீஸாரைப் பாராட்டி எஸ்பி வெகுமதி அளித்தார்.

SCROLL FOR NEXT