அமெரிக்காவைச் சேர்ந்த மீனாட்சி திருக்கோயில் சங்கம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக அலுமினி அசோசியேஷன் வழங்கிய 80 ஆக்சிஜன் சிலிண்டர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு ஆட்சியர் கிரன்குராலா ஒப்படைத்தார். 
Regional02

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு - அமெரிக்க அமைப்பு 80 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கல் :

செய்திப்பிரிவு

அமெரிக்காவைச் சேர்ந்த மீனாட்சி திருக்கோயில் சங்கம்மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக அலுமினி அசோசியேஷன் ரூ.33.45 லட்சம் மதிப்பிலான100 ஆக்சிஜன் சிலிண்டர்களை கள்ளக்குறிச்சி, கடலூர்,சிவகங்கை மருத்துவமனைகளுக்கு வழங்கி உள்ளது. இதில் 80 சிலிண்டர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும், 10 சிலிண்டர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த அமைப்பினருக்கு கள்ளக் குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரன்குராலா நன்றி தெரிவித்தார். இந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை கள்ளக்குறிச்சி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனை பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் நேற்றுமுன்தினம் ஒப்படைத்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ரூ.33.45 லட்சம் மதிப்பிலான 100 ஆக்சிஜன் சிலிண்டர்களை கள்ளக்குறிச்சி, கடலூர்,சிவகங்கை மருத்துவமனை களுக்கு வழங்கி உள்ளது.

SCROLL FOR NEXT